123

Bombay Kulfi – Adayar, Chennai

Bombay Kulfi, Adayar, Chennai
044-45530099
Time : 11am to 11pm

Famous for Kulfi, and you get sugar free kulfi, malai kulfi, and many more. All kulfi prepared in Mumbai and fly to Chennai !

குளிர் காற்றால் ஆரத் தழுவி அவரை வரவேற்றது, அடையாறு பாம்பே குல்பி. கடையின் வண்ண இருக்கைகள் எல்லாம் வாடிக்கையாளர்களால் நிறைந்திருக்க, இடம் கிடைக்காதவர்கள், குல்பிகளை வாங்கிக் கொண்டு, கடையின் புறத்தே நின்றபடி ருசித்துக் கொண்டிருந்தனர்.
‘எனக்கு மலாய் குல்பி; எனக்கு, கேசர் பிஸ்தா; யப்பா… எனக்கு, சுகர் ப்ரீ மலாய் வாங்கிடுப்பா!’ குடும்பம் குடும்பமாய் வந்திருந்தவர்கள், ஆளுக்கு ஒன்றாய் கேட்க, ‘அண்ணே… நமக்கு ஒரு டென்டர் கோகனட்!’ அளவில் சிறியதான அந்த கடையை, தன் கம்பீர குரலால் அதிர வைத்தார் சோத்து மூட்டை!
ருசியின் ரகசியம்: ‘குல்பியோட தலைநகரம், மும்பை. அங்கே இருந்து தான், மூணு நாளைக்கு ஒரு தடவை குல்பிகளை கொண்டு வர்றோம். எங்க கடை குல்பியில, செயற்கை சுவையூட்டிகள் கிடையாது. அதனால தான், இந்த ருசி’ என்கிறார் கடையின் உரிமையாளர் ஹிதேஷ் கண்ணா.

இடம்: பாம்பே குல்பி, அடையாறு, சென்னை.

போன்: 044 – 4553 0099

நேரம்: முற்பகல் 11:00 – இரவு 11:00 மணி

Thanks to Dinamalar
http://www.dinamalar.com/news_detail.asp?id=1523983

123

123a