Ammanpuram

Ammanpuram vilas Karachev – Tiruchendur

Ammanpuram

Place : Ammanpuram Mani vilas, Tiruchendur
Phone : 93633 46601
Time : 10am to 4pm

இடம்: அம்மன்புரம் மணி விலாஸ், திருச்செந்துார்.

போன்: 93633 46601

நேரம்: காலை 10:00 – மாலை 4:00

ஒரு பழுப்பு நிற தேநீர் விடுதியின் முன் வண்டி நின்றது. ‘அண்ணே… ரெண்டு டீ போடுங்க. மாப்ள கடிச்சிக்க கொஞ்சம் சேவு எடுத்துக்கோங்க’ என்றபடியே, சூடான காரச்சேவோடு என் பக்கத்தில் அமர்ந்தார் மாமா. அளந்து செய்தது போல், ஒரே அளவில் இருந்த காரச்சேவை, கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டேன்; டீ குடிப்பதற்காக, மாமா இவ்வளவு துாரம் வந்ததன் ரகசியம் புரிந்தது. அம்மன்புரம், ‘மணி விலாஸ்’ பட்டாணி காரச்சேவில் அவ்வளவு ருசி!
திரும்பும் வழியில், ‘தெரிஞ்ச கடையா மாமா இது?’ என, நான் பேச்சை ஆரம்பிக்க, ‘அப்படியெல்லாம் இல்ல மாப்ளே; அப்பப்போ வந்து போவேன்’ பல்லிடுக்கில் சிக்கியிருக்கும் சேவை, நாவால் நிரடிக் கொண்டே மாமா சொன்னார். ’60 வருஷத்துக்கு முன்னால, ‘ஜெபமணி’ங்கிறவரு, இங்கே சின்னதா ஒரு டீக்கடையை ஆரம்பிச்சு நடத்தியிருக்கார்! டீ சாப்பிட வந்தவங்களுக்காக, கொஞ்சமா, பட்டாணி மாவுல சேவு போட்டு கொடுத்திருக்கார். வந்தவங்களுக்கு ருசி புடிச்சுப் போக, டீக்கடை, இன்னைக்கு காரச்சேவு கடையா மாறிடுச்சு! எவ்வளவு காரச்சேவு போட்டாலும், சூடு ஆறுறதுக்குள்ளே வித்து தீர்ந்துடும்.

ருசியின் ரகசியம்!: ‘இது, பட்டாணி மாவு, பாமாயில்ல தயாராகுற காரச்சேவு; அதனால, 3 மாசம் வரைக்கும் கெட்டுப் போகாது’ என, தங்கள் காரச்சேவின் ருசி ரகசியத்தை அம்பலப்படுத்துகிறார், கடை பராமரிப்பாளர் பாலசிங்.

என்ன விலை?: சின்னச் சின்ன அளவில், குழந்தைகள் விரும்பும் வகையில் பதமாக இருக்கும், ‘அம்மன்புரம் காரச்சேவு’ 160 ரூபாய் / கிலோ.

சோத்து மூட்டை: ‘என்ன பெரிய காரச்சேவு; நாம பார்க்காததா?’ங்கற அலட்சியத்துல தான், மொத வாய் எடுத்து வைச்சேன். ஆனா, ஒரேமாதிரி நேர்த்தியா இருந்த அளவும், மொறுமொறுப்பும், கால் கிலோவை கடையிலேயே காலி பண்ண வைச்சிருச்சு! அப்புறம், மாமா கூட வண்டியில வரும் போது, ஒரு கால் கிலோ சாப்பிட்டேன். இப்போ, தன் மகளுக்கும், பேர பிள்ளைகளுக்கும்னு, ஒரு ரெண்டு கிலோவை, மாமா தனியா வாங்கியிருக்காருல்ல… அதுல இருந்தும் கொஞ்சம் எடுத்து வைச்சுக்கணும்னு திட்டம் போட்டிருக்கேன்!

Thanks to Dinamalar : http://www.dinamalar.com/news_detail.asp?id=1460660