Capture

Andhi kadai – Velachery, Chennai

Capture

Andhi kadai, Thandeeshwaram road, Velachery, Chennai
Phone : 044 – 6461 1234
Time : 7:30am to 11:00pm
Famous for Valaipoo vadai and filter coffee with Sweet kolukattai

இடம்: அந்திக்கடை, தண்டீஸ்வரம் சாலை, வேளச்சேரி, சென்னை.

போன்: 044 – 6461 1234

நேரம்: காலை 7:30 – இரவு 11:00 மணி

‘இன்னைக்கு நாம போகப் போறது, வேளச்சேரி அந்திக்கடை! நவீன உணவுகளோட வருகையால காணாமப் போன, நம்ம பாரம்பரிய உணவுகளான இனிப்பு கொழுக்கட்டை, சுசியம், வாழைப்பூ வடை, முருங்கைக்கீரை அடை, மிளகு அடை, கார பணியாரம் தான் இந்தக் கடையோட ஸ்பெஷல்! தோசை, பரோட்டா, சப்பாத்தி அயிட்டங்களும், சோறு, குழம்பு, மோர்னு இலை சாப்பாடும் வீட்டு பக்குவத்துல இங்கே கிடைக்கும்! இப்போ நான், அங்கே இருந்து வாங்கிட்டு வந்த, ‘மினி பில்டர் காபி’யை குடிக்கப் போறேன். அதனால, நான் குடிச்சு முடிக்கிற வரைக்கும் இந்த பாட்டை கேட்டுட்டு இருங்க!’ அறிவிப்பாளர் பேசி முடிக்கவும், மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் மகிழுந்து நுழையவும் சரியாக இருந்தது!

‘மச்சி…வாழைப்பூ வடை சாப்பிட்டிருக்கியா; சாப்பிட்டுப் போயிடுவோமா?’ எச்சில் ஒழுக நான் கேட்க, மும்பைக்காரன் தலையாட்டினான். மகிழுந்து வேளச்சேரி நோக்கி விரைந்தது!

வாழைப்பூ வடை: கடலை பருப்பை மிதமாக அரைத்து, அதனுடன் பொடிதாக நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து பிசைந்து, வடை போல் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் வாழைப்பூ வடை தயார்!

ருசியின் ரகசியம்: ‘பிஞ்சு வாழைப்பூக்களை மட்டும் பயன்படுத்துறதும்; கடலை பருப்பை சரியான பதத்துல அரைக்கிறதும் தான், இந்த ருசிக்கு காரணம்!’ என்கிறார், கடையின் நிறுவனர் சத்யா!

என்ன விலை: தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகளின் கூட்டணியோடு கிடைக்கும் மொறுமொறு வாழைப்பூ வடை – 15 ரூபாய் / ஒன்று.

சோத்து மூட்டை: கடை முழுக்க, பில்டர் காபி வாசம்! ‘2 காபி, ஒரு ப்ளேட் வாழைப்பூ வடை, இரண்டு ஸ்வீட் கொழுக்கட்டை’ன்னு ஆர்டர் கொடுத்துட்டு உட்கார்ந்தேன்! கொஞ்ச நேரத்துல, ஆர்டர் கொடுத்தது எல்லாம் எங்க முன்னால ஆஜர்! மெதுவா ஒரு வடையை எடுத்து, பக்குவமா கடிச்சேன்! ஆஹா… மொறுமொறுப்பும், வாழைப்பூவோட சுவையும் ஒண்ணா கலந்து, என் நாக்குக்கு சொர்க்கத்தை காட்டிடுச்சு! ‘டேய் மும்பைக்காரா… இந்தா!’ ஒரு வடையை அவன்கிட்டே நீட்டுனேன்; பதிலுக்கு அவன், எனக்கு ஒரு கொழுக்கட்டை கொடுத்தான்! கொழுக்கட்டைக்குள்ளே இருந்த வெல்லம், எங்க நட்பு மாதிரியே இனிச்சது! வாவ்… இந்த வாழைப்பூ வடைக்கும், பில்டர் காபிக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்குதுங்க! பின்னே… வடையோட ருசி மாதிரியே, காபியோட ருசியும் இன்னும் நாக்குலேயே நிற்குதுல்ல!

Thanks to source : http://www.dinamalar.com/news_detail.asp?id=1547767