Coimbatore thayir vadai

Chellam canteen thayir vadai – Coimbatore

Coimbatore thayir vadai

Coimbatore thayir vadai1

Place : Chellam canteen, Ponnaiya rajapuram 4th street, Coimbatore
Phone : 95662 81857
Time : 9am to 4pm

Special about Thayir vadai and Mixture

இடம்: செல்லம் கேன்டீன், பொன்னையராஜபுரம் 4வது வீதி, கோவை.

போன்: 95662 81857

நேரம்: காலை 9:00 – மாலை 4:00 மணி

‘என்னடா அம்பி முழிக்கிறே! மாமி கடையில எல்லாம் வாங்கி சாப்பிட ஆரம்பிச்சிட்டாளான்னு ஆச்சரியமா இருக்கா? என்ன பண்றது… அந்த கடை தயிர் வடைக்கு அப்படி ஒரு ருசி! துரைசாமி அய்யர்னு ஒருத்தர், பயில்வானாகுற ஆசையிலே மதுரையிலே போய் குஸ்தி எல்லாம் கத்துக்கிட்டு வந்து, இங்கே வாத்தியாரா இருந்தார். அப்படியே, வீட்டுச் செலவுக்காக, ஒரு தள்ளு வண்டியிலே தயிர் வடை, மிக்ஸர், இனிப்பு சேவுன்னு வியாபாரம் செய்ய ஆரம்பிச்சார். ராஜ வீதி, தெலுங்கு பிராமணர் வீதின்னு ஒவ்வொரு இடமா மாறின அந்த தள்ளுவண்டி கடை, இன்னைக்கு அவங்க குடியிருக்கிற வீட்டுலேயே சின்ன கடையா மாறியிருக்கு! துரைசாமி அய்யர் வித்த மிக்ஸர் நல்ல ருசியில இருந்ததால, அதுக்கு, ‘பயில்வான் மிக்ஸர்’ன்னு அவர் பேரையே வைச்சுட்டாங்க! நீயும் சாப்பிட்டுப் பாரு; அப்புறம் புரிஞ்சுப்பே, மாமி ஏன் அந்த தயிர் வடைக்கும், மிக்ஸருக்கும் அடிமையானான்னு!’- வழி நெடுக பயில்வான் புராணம் பாடி முடித்தார் மாமா.

தயிர் வடை: உருட்டு உளுந்து, துவரம் பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து, வெண்ணெய் பக்குவத்திற்கு அரைத்து, அதை வடையாக சுட்டெடுத்து, தயிருடன் கலந்த தேங்காய் – பச்சை மிளகாய் – கறிவேப்பிலை கலவையில், ஒரு மணிநேரம் ஊற வைத்து பரிமாறினால், தயிர் வடை தயார்!

ருசியின் ரகசியம்: ‘அதிகம் புளிப்பில்லாத வீட்டு தயிர்; நாவிற்கு இதம் தரும் மிதமான காரம்; தயிரில் வடையை ஊற வைக்கும் பக்குவமே, இந்த ருசிக்கு காரணம்’ என்கிறார் கடையின் தற்போதைய நிர்வாகியான ராமேஸ்வரன்.

என்ன விலை?: இரண்டு வடைகள், கொஞ்சம் பட்டாணி சுண்டல், மெது பக்கோடா சேர்த்து பரிமாறப்படும் ஒரு கிண்ணம் – 25 ரூபாய்.

சோத்து மூட்டை: ஒரு தெர்மாகோல் கிண்ணத்துல ரெண்டு மெது வடை, கொஞ்சம் பட்டாணி, மெது பக்கோடான்னு நிறைச்சு, அதுல தயிர் ஊற்றி, கேரட் துருவலை தூவி கொடுத்தாங்க! என்ன தான் தயிருல நல்லா ஊறி இருந்தாலும், சில கடைகள்ல வடையை பிய்ச்சு எடுக்க சண்டையே போட வேண்டியிருக்கும்! ஆனா இந்த தயிர் வடையிலே, கரண்டியை வைச்சதும் வெண்ணெயிலே இறங்குற மாதிரி கரண்டி இறங்குச்சு! வாவ்… புளிக்காத தயிரும், அதுக்கு பதமா இணை சேர்ந்த காரமும், அப்பப்பா… அற்புதமான ருசி போங்க! வடையோட சேர்ந்து பட்டாணி, மெது பக்கோடா ரெண்டும் பல்லுல சிக்க, தயிர் வடை ருசி வேற ரேஞ்சுக்கு எகிறிடுச்சு! ஒரு வடை சாப்பிட்டதுமே அரை வயிறு நிறைஞ்ச மாதிரி உணர்வு; ஆனாலும், நான் நாலு சாப்பிட்டேன். கூடவே, நாலு தயிர் வடை பார்சலும் வாங்கிக்கிட்டேன்!

Thanks to Dinamalar – http://www.dinamalar.com/news_detail.asp?id=1552834