Chicken

Chicken Podimas – Teynampet, Chennai

Chicken

Place : Kumaravel chettinadu meals, Thenampet, Chennai
Phone : 73580 09595
Time : 12pm to 11pm

Special about Cheicken Podimas, Vanchiram fry

இடம்: குமரவேல் செட்டிநாடு மீல்ஸ், தேனாம்பேட்டை, சென்னை.

போன்: 73580 09595

நேரம்: நண்பகல் 12:00 – இரவு 11:00 மணி

சிக்கன் பொடிமாஸ்: அவித்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை, நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், வத்தல், கருவேப்பிலை, வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, துருவிய சிக்கன் துண்டுகளை அதில் போட்டு, முட்டை ஊற்றி நன்றாக கிளறினால், ‘சிக்கன் பொடிமாஸ்’ ரெடி!

ருசியின் ரகசியம்: ‘சமையலுக்கு தேவையான மசாலாக்களை, நாங்களே தயார் பண்றோம். கோழியோட நெஞ்சுக்கறியை மட்டும் தான் சமையலுக்கு பயன்படுத்துறோம்!’ என, ருசியின் ரகசியம் சொல்கிறார், கடையின் நிறுவனர் குமரவேல்!

என்ன விலை?: நாவின் சுவை மொட்டுகளை கிறங்கடிக்க வைக்கும் சிக்கன் பொடிமாஸ் – 130 ரூபாய் / ஒரு கிண்ணம்

சோத்து மூட்டை: சிக்கன் பொடிமாஸோட உண்மையான பேரு, பிய்ச்சுப் போட்ட கோழியாம்! உண்மையாவே, அது என் மனசை பிய்ச்சுப் போட்ட கோழி தான்; அம்புட்டு இதம்! பஞ்சு மாதிரி இருந்த நெஞ்சுக்கறியும், முட்டையோட பதமும் கலந்து, ‘பொடிமாஸ்’ ரொம்பவே மிருதுவா இருந்துச்சு. மிளகோட காரம் கண்ணுல வழிஞ்சாலும் விடுவோமா… ஒரு பிடி பிடிச்சுட்டு, அடுத்த பிளேட்டை வாங்கிட்டோம்ல! அதேமாதிரி, சாப்பிடுறவங்களுக்கு வஞ்சகம் நினைக்காத மீனுன்னா, அது வஞ்சிரம் மீனு தான்! செக்கச் செவேல்னு இருந்த மீனை எடுத்து, கடிச்சு இழுத்தது தான் தெரியும்; ‘நானும், பொடிமாஸுக்கு சளைச்சவன் இல்லை’ன்னு சொல்ற அளவுக்கு, அதுவும் அம்புட்டு ருசி! சத்தியமா சொல்றேன்… நான் ‘வெயிட்டா’ சாப்பிட்டிருந்தாலும், ‘லைட்டா’ சாப்பிட்ட மாதிரி தான் இருந்துச்சு. அதுவும், அடுத்த ஒரு மணி நேரத்துல, ‘ஆவ்…’ன்னு ஏப்பமா போயிடுச்சு!

Thanks to Dinamalar – http://www.dinamalar.com/news_detail.asp?id=1557694