dsc_0902

Durian Seng – Singapore

Durian Seng Singapore
Shop Name : Durian Seng
opening Hours : 3 PM to 11 PM (During Season)
Address : 12 Jalan Tampang, Sembawang Garden Arcade Singapore 758956
Season : June to September

சிங்கப்பூர் சாப்பாடுன்னு வந்துட்டா டூரியன் பழத்தை தவிர்க்கமுடியாது .இங்க அதுக்கு அப்படி ஒரு மோகம்.பலாப்பழத்தை போன்று தோற்றமளிக்கும் டூரியன் பழம் ஆசியாவின் ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. பழங்களின் ராஜா என்றழைக்கப்படும் டூரியனின் நாற்றம் குடலைப்பிரட்டினாலும் அதை மிகுந்த மோகத்துடன் சாப்பிடுகிறார்கள். சிங்கப்பூர்ல டூரியன இப்படி சொல்வாங்க

dsc_0881

Durian ‘smells like hell, tastes like heaven and heals like a miracle’

என்னை தவிர, எங்க வீட்டுல எல்லோரும் சாப்பிடுவாங்க. அப்படி ஒரு டேஸ்ட்னு சொல்வாங்க. ஒரு தடவை சாப்பிட்டு நாள் முழுக்க வாய் நாற்றத்துடன் அலைந்தது வேற விஷயம். நம்ம ஊர்ல இதை குழந்தை இல்லாதவங்க சாப்பிட்ட குழந்தை பொறக்கும்னு வழக்கம் போல ஒரு புரளியை கிளப்பிவிட்டு, ஒரு பழம் 1000 ரூபாய்க்கு மேல விக்கிறதா நியூஸ் பேப்பர்ல படிச்சன்.இது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு தெரியலை.

dsc_0900

dsc_0926

டூரியன் சாப்பிட்டா உடலுக்கு ரொம்ப சூடுன்னு சொல்வாங்க, அதனால டூரியன் சாப்பிட்டா “mangosteen” எனும் பழத்தை சாப்பிடுவாங்க இது உடம்புக்கு குளிர்ச்சி. இல்லாட்டி “Three Legs” னு ஒரு சீன “cool water” வாங்கி குடிப்பாங்க.சிங்கப்பூர்ல டூரியன் எல்லா இடத்துலயும் கிடைக்கும். Mr Yap , டூரியன் கடை ரொம்ப புகழ் பெற்றது, இவர் ஒரு நம்பகமான மறு விற்பனையாளர், இவரது பிறந்தநாளான 11 ஜூலை எல்லோருக்கும் இவர் கடைல டூரியன் இலவசம். இவர் கடையில
மலிவான விலையில டுரியன் வாங்கலாம்.

dsc_0913

Tip : சிங்கப்பூர் MRT’ல டூரியன் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது.

Lohanathan Balakrishnan


#sgfoods  #logutop50sgfoods  #lohanathansingapore