Kodambakkam

Exclusive egg uppuma – Kodambakkam , Chennai

Kodambakkam

Place : Exclusive, Kodambakkam, Chennai
Phone : 044 – 4501 8555
Time : 11am to 11pm

Special about : Jungle omblet, fried egg sandwich, egg uppuma, scarmbled egg wrap

இடம்: எக்ஸ்க்ளூசிவ், கோடம்பாக்கம், சென்னை.

போன்: 044 – 4501 8555

நேரம்: முற்பகல் 11:00 – இரவு 11:00 மணி

‘அடியே… அவிச்ச முட்டைக்கு பொறந்தவளே… இங்கே முட்டையை வைச்சே நிறைய உணவுகள் செஞ்சுக் கொடுக்குறாங்கடி! ஜங்கிள் ஆம்லெட், ப்ரைடு எக் சாண்ட்விச், எக் புஜியா, எக் உப்புமான்னு தினுசு தினுசா நிறைய அயிட்டம் இருக்கு!’ என்றவர், ‘முதல்ல நாம, ‘ஸ்க்ராம்பிள்டு எக் வ்ராப்’ ஒண்ணு வாங்கி, ஆளுக்கு பாதி எடுத்துக்குவோம். அப்புறம், ஆளுக்கொரு ப்ளேட், ‘ஷ்வான் நூடுல்ஸ்’ வாங்கிப்போம்; என்ன?’ சோத்து மூட்டை மனைவியிடம் கேட்க, ‘யோவ்… சோத்துல விஷம் வைச்சிடுவேன்னு சொன்னதும், இங்கேயே சாப்பிட்டு தப்பிச்சிடலாம்னு நினைச்சிட்டியா? யோவ்… ஆயிரம் தான் இருந்தாலும், நீ எனக்கு தாலி கட்டுனவன்யா! நான் அப்படியெல்லாம் செய்வேனா?’ – மிஸஸ் சோத்துமூட்டை கணவனை கொஞ்ச ஆரம்பித்தார்.

‘ஸ்க்ராம்பிள்டு எக் வ்ராப்’ன்னு ஆர்டர் கொடுத்ததும், ‘கோதுமை சப்பாத்தி வேணுமா; மைதா சப்பாத்தி வேணுமா’ன்னு கடைக்காரங்க கேட்டாங்க. ‘ரெண்டுலேயும் ஒவ்வொண்ணு கொண்டு வாங்க’ன்னு சொல்லி சிரிச்சேன். வந்துச்சு; பெருசா சுருட்டி வைச்சிருந்த வ்ராப் எடுத்து, ஒரு கடி! முட்டை மசாலாவோட பாதி சப்பாத்தி வாய்க்குள்ளே போயிடுச்சு. பதமா இருந்த முட்டை கூட, கேரட்டோட இனிப்பு சேர்ந்து, வ்ராப்பை செம ருசியாக்க, ரெண்டையும் தின்னு முடிக்கும் போது தான் தோணுச்சு; அய்யய்யோ… எதிர்ல ஒரு ஜீவன் உட்கார்ந்துட்டு இருக்குதேன்னு! அம்புட்டு தான்; மறுபடியும் பேயாட்டம் ஆடுனவளை, ஷ்வான் நூடுல்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினேன்! சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் அவளுக்கு ஒரு, ‘மாக்டெய்ல்’ ஆர்டர் பண்ணுனேன். பின்னே… நூடுல்ஸ் காரத்துல அவளுக்கு கண்ணு வியர்த்திடுச்சுல்ல!