a2

Kamatchi mess – Pattukkottai

பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்

மதியம் மட்டுமே இயங்கும் இந்த மெஸ்ஸில் சாப்பாடு மட்டுமே கிடைக்கும். சிக்கன் கிரேவி, நண்டு கிரேவி, இறால் கிரேவி, காடை கிரேவி என விதவிதமான கிரேவிகளைக் கொடுத்து அசத்துகிறார்கள்.
மீன், மட்டன், எலும்பு, சிக்கன், கருவாட்டுக் குழம்பு வகைகளும் உண்டு. மீன் வறுவல், இறால், சுக்கா, நண்டு வறுவல், காடை, மட்டன் சுக்கா, தலைக்கறி சாப்ஸ், கறி கோலா, மூளை பெப்பர், ஈரல் மசால் என விதவிதமாக சைட் டிஷ்களும் உண்டு. நாம் ஆர்டர் செய்தது, இறால் சுக்கா மற்றும் நண்டு வறுவல். செய்தித்தாளை விரித்து அதன் மேல்தான் இலையைப் போடுகிறார்கள். அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலுடன் மண் குடுவையில் தயிரையும், சின்ன வெங்காயத்தையும் வைப்பது இந்த மெஸ்ஸின் சிறப்பு.
கூட்டு, பொரியல் வைத்தவுடன் சாதம் வருகிறது. பிறகு ஒவ்வொரு கிரேவி மற்றும் குழம்பாகக் கொண்டு வருகிறார்கள். எதையாவது ‘வேண்டாம்’ என்று சொன்னால்… ‘கொஞ்சம் வாங்கி சாப்பிட்டுப் பாருங்க’ எனக் கனிவு காட்டுகிறார்கள். இறால் சுக்காவும், நண்டு வறுவலும் வந்துவிட, அதன் வாசனையே நம் நாவில் எச்சில் ஊற வைத்தது. சாப்பிட்டு முடித்தவுடன் செரிமானத்துக்காக கடலை மிட்டாய் தருகிறார்கள்.
இந்த மெஸ், சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அசைவப் பிரியர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இப்போது, புதிய கிளை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் வழியாக பயணிக்கும் பகுதிவாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளில் பலரும் இந்த மெஸ்ஸில் கை நனைப்பதை வாடிக்கையாகவே வைத் துள்ளனர்.

13115702_1228581290515993_495499864_n

a2