Place : Selvamani tiffin kadai, Forest road, Theni
Phone : 99944 44866
Time : 6pm to 10pm
Special for Paniyaram
இடம்: செல்வமணி டிபன் கடை, தேனி.
போன்: 99944 44866
நேரம்: மாலை 6:00 – இரவு 10:00 மணி
அது, தேனி பாரஸ்ட் சாலையில் இருந்த, சின்ன கடையின் முன் நின்றது. ‘வாங்கண்ணே… என்ன சாப்பிடுறீக?’ உரிமையுடன் கேட்டார், அந்த பெண்மணி. ‘நல்லா இருக்கியாம்மா? உன் கடைக்கு வேற என்ன சாப்பிட வருவோம். வழக்கம்போல பணியாரம் தான்!’ பதில் முடிவதற்குள், பணியாரம் எங்கள் கைகளில் அடைக்கலமானது; கூடவே, 5 வகை சட்னியும்.
ருசியின் ரகசியம்: ‘வழக்கமான பணியாரத்துக்கான பக்குவம்தான். ருசிக்காகவும், வயித்த கெடுக்காம இருக்கவும், காரப் பணியாரத்துல, கேரட் துருவல், இஞ்சித் துண்டு, கொத்தமல்லி எல்லாம் போடுறோம். அதனால தான், எங்களோட பணியாரம், நல்ல ருசியையும், வயிறாற சாப்பிட்ட திருப்தியையும் கொடுக்குது’ என்கிறார், கடையின் உரிமையாளர் ராஜாமணி.
என்ன விலை?: 5 வகை சட்னிகளுடன், 3 பணியாரங்களின் விலை, 10 ரூபாய்.
சோத்துமூட்டை: உள்ளூர் யாவாரி, ஊர் பெருமைக்காக ஒசத்தியா சொல்றாருனு நினைச்சிட்டு, அந்த கடைக்கு சாப்பிடப் போனேன். ஆனா, இட்லியில கால் பங்கு இருந்த பணியாரமும், அதுக்கு அவங்க கொடுத்த, 5 வகை சட்னியோட ருசியும், ‘இன்னுங்கொண்டா… இன்னுங்கொண்டா’ன்னு கேக்க, நான் மட்டுமே இருபது, முப்பது பணியாரத்தை உள்ளே தள்ளுனேன். போதாக்குறைக்கு, யாவாரியோட காசுல, பஸ்சுல சாப்பிட, 50 ரூபாய்க்கி இனிப்பு பணியாரமும் கட்டிக்கிட்டேன்.
Thanks to Dinamalar : http://www.dinamalar.com/news_detail.asp?id=1460672