rasavadai

Krishnan kadai rasa vadai – Vadacheri, Nagercoil

rasavadai

Place : Krishnan kadai, kamatchi amman street, Vadacheri, Nagercoil
Phone : 90438 00949
Time : 5pm to 10pm

Special for Rasa vadairasavadai

இடம்: கிருஷ்ணன் கடை, வடசேரி

போன்: 90438 00949

நேரம்: மாலை 5:00 – இரவு 10:00 மணி

‘இங்கே ரச வடை…’ முகவரி தேடிய என் வாக்கியம் முடிவதற்குள், ‘இங்க இருந்து நேரா காமாட்சி அம்மன் கோவில் தெருவுக்குப் போங்க. அங்க கிருஷ்ணன் கடைன்னு இருக்கும். கடை எங்க இருக்குன்னு தேடுறதுக்கு, உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இருக்காது. ஏன்னா, அந்த தெருவுலேயே, அந்த கடை முன்னாடி தான் கூட்டம் அதிகமாக இருக்கும். கடை ஒண்ணும், அவ்வளவு பெருசா இருக்காது; ஒரு சின்ன தள்ளுவண்டி தான் கடை! ஆனா, ரசமும் வடையும் அவ்ளோ ருசியா இருக்கும். 20 வருஷமா, அந்த தெருவுக்கு, அந்த கடையும் ஒரு அடையாளம். ரசத்துல ஊறின பருப்பு வடையும், காரமான ரசமும் சாப்பிட்டு பாருங்க, நீங்க மதியம் சாப்பிட்ட சாப்பாடு, ‘பட்’டுன்னு செரிமானமாயிடும்!’ மூச்சு விடாமல் சொல்லி முடித்தார் உள்ளூர்வாசி.

ருசியின் ரகசியம்: ‘எங்க ஊருக்கு பக்கமா கேரளா இருக்கிறதால, ரசத்துக்கான நல்ல மிளகை அங்க இருந்து மொத்தமா வாங்கிட்டு வந்திருவேன். அதுக்கப்புறம், கொத்தமல்லி, வத்தல், சீரகம் எல்லாம் தரமானதா பயன்படுத்துறேன். ரசத்துக்கான புளியோட, கொஞ்சமா சேர்க்கப்படுற எலுமிச்சை சாறும், ரசத்துக்கான ருசிக்கு முக்கிய காரணம்!’ வடை ருசிக்க காரணமான, ரச ருசியின் ரகசியத்தை, ரசித்துச் சொன்னார் உரிமையாளர் கிருஷ்ணன்.

என்ன விலை?: எத்தனை முறை கேட்டாலும் கிடைக்கும் காரமான ரசத்துடன், 2 வடை கொண்ட கிண்ணம் 8 ரூபாய்.

சோத்துமூட்டை: வீட்டுல ரசத்தைப் பார்த்தாலே, 1 கிலோ மீட்டர் ஓடிப் போறவன் நான். இங்க, 2 வடைக்கு மூணு கிண்ணம் ரசம் வாங்கி குடிச்சேன். ஸ்பூனால வடையை தொடுறப்போ, வெண்ணெய்யை தொடுற மாதிரி இருந்துச்சு; ரசத்துல ஊறின வடை, அம்புட்டு மென்மை! ரசத்துல ஊறின வடை, தொண்டை குழிக்குள்ளே சாறோட இறங்குறப்போ, ப்ப்ப்பா… எம்பூட்டு ருசி!

Thanks to Dinamalar :