online

Online tasty sweets – South India

online

Place : SweetKaramCoffee.in
Phone : 73580 68806
Time : 9:30am to 7pm

Only online orders accepted or thru phone

இடம்: www.sweetkaramcoffee.in

போன்: 73580 68806

ஆர்டர் நேரம்: காலை 9:30 – இரவு 7:00 மணி

‘டேய்… இன்னைக்கு தமிழ் புத்தாண்டு. இன்னைக்காவது, நாக்குக்கு ருசியா சாப்பிடுவோம்டா; அதான், ‘ஸ்வீட் காரம் காபி’க்கு போன் பண்ணி, அக்காரஅடிசில் ஆர்டர் பண்ணுனேன். குலோப் ஜாமூன், லட்டு, மனோகரம், பால்கோவான்னு ஆரம்பிச்சு, வாழைப்பூ ஊறுகாய், வல்லாரை கீரை தொக்கு, கருவேப்பிலை பொடி, இட்லி பொடின்னு சகலமும் அங்கே கிடைக்கும். ஆங்… இது எல்லாத்தையும், போன் மூலமாவோ, ஆன்லைன் மூலமாவோ மட்டும் தான் ஆர்டர் பண்ண முடியும்!’

ருசியின் ரகசியம்: ‘பால், நெய் இது ரெண்டும் தான் இந்த அதீத ருசிக்கு முதல் காரணம்; ஆர்டர் பண்ணினதுக்கு அப்புறம், சுடச்சுட சமைச்சுக் கொடுக்கிறதும், எங்க கைப்பக்குவமும் இன்னொரு காரணம்’ என்கிறார், ‘ஸ்வீட் காரம் காபி’ நிறுவனர் வெங்கடகிருஷ்ணன்.

என்ன விலை: நெய் மிதக்கும்/மணக்கும் அக்காரஅடிசில் – 400 ரூபாய்/ 500 கிராம்

சோத்துமூட்டை: என் மனைவி பாசமா தட்டினதுல, வாய் வலது பக்கமா சைடு வாங்கிடுச்சு. இருந்தாலும், சும்மா விடுவேனா? அக்காரஅடிசிலை ஒரு பெரிய பாத்திரத்துல நிரப்பிட்டு மாடிக்கு ஓடிட்டேன்! அக்காரஅடிசிலுக்கு அழகே, அதுக்கு மேலே மிதக்குற நெய் தான். டீஸ்பூனால ஒரு கிண்டு கிண்டி, முந்திரி பருப்போட சேர்த்து, கொத்தா அள்ளி வாய்க்குள்ளே, அதை வழியனுப்பி வைச்சது தான் தாமதம், உடம்பெல்லாம் சிலிர்த்திடுச்சு போங்க; அம்புட்டு ருசி! அப்புறம் என்ன… கொண்டு போனது எல்லாத்தையும் மடமடன்னு காலி பண்ணிட்டு, கீழே இருக்கிற மிச்சத்தையும் காலி பண்ணலாம்னு பரபரப்பா இறங்கி வந்தா, என் சம்சாரம், பார்சல் வந்த டப்பாவை கழுவி, கவுத்தி போட்டிருந்தா! ம்ஹும்… எனக்கு கொடுத்து வைச்சது அவ்வளவு தான்!

Thanks to Dinamalar : http://www.dinamalar.com/splpart_main.asp?cat=1368