Jelabi

Shanmuga vlias Jelabi – Salem

Jelabi

Place : Shree Shanmuga vilas Jilabi shop, Kugai bus stop, Salem
Phone : 94436 53585
Time : 7am to 9pm

Special for Hot and tasty jilabis

இடம்: ஸ்ரீ சண்முக விலாஸ் ஜிலேபி கடை, சேலம்

போன்: 94436 53585

நேரம்: காலை 7.00 – இரவு 9.00 மணி

‘அந்த ஏரியா ஜிலேபியோட ருசியே தனி தான். சேலம் வர்றவங்க, இங்கே வந்து ஜிலேபி வாங்காம போக மாட்டாங்க!’ என்றார். ‘நானும் அதுக்குத் தான் வந்திருக்கேன்’ என சொல்வதற்கு வாய் திறக்கையில், ‘வர்ற ஸ்டாப் தான்!’ என முடித்தார். பேருந்து, தன் களைப்பை போக்க நின்றது; நான், ‘குகை’க்குள் கால் வைத்தேன்.
‘சண்முக விலாஸ் கடையா; அதோ இருக்கு பாருங்க, அது தான்’ வழிப்போக்கன் கை நீட்டிய திசையில் இருந்தது, நான் தேடி வந்த கடை. 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் இருக்கும் அந்தப் பகுதியில், ஏராளமான ஜிலேபி கடைகள் இருந்தாலும், ‘ஸ்ரீ சண்முக விலாஸ்’ தான், அதற்கெல்லாம் முன்னோடியாம்.

ருசியின் ரகசியம்: நயமான உளுந்தை வாங்கி, அதை நாங்களே அரைக்கிறதும்; சரியான பதத்துல, சர்க்கரைப் பாகை தயாரிக்கிறதும் தான், 60 வருஷமா எங்களோட ருசிக்கு காரணம் என்கிறார், கடையின் உரிமையாளர் பாஸ்கர்.

என்ன விலை?: 35க்கும் அதிகமான எண்ணிக்கை கொண்ட ஒரு கிலோ ஜிலேபி, ரூ.180. சில்லரை விலையில், ஒன்று, 5 ரூபாய்.

சோத்துமூட்டை: நல்ல பதமா சர்க்கரைப் பாகுல ஊறி, இளஞ்சூடா இருந்த ஜிலேபி, நாக்குல பட்டவுடனே பஞ்சா கரைஞ்சிடுச்சு. ருசி பார்க்க தந்த, 2 ஜிலேபி போக, கால் கிலோ வாங்கி, அங்கேயே காலி பண்ணிட்டேன். வீட்டுக்கு வாங்கிட்டுப் போய் அசத்தலாம்னு, 2 கிலோ வாங்கினேன்; ஊருக்கு போறதுக்குள்ளே, அரை கிலோவை, நானே உள்ளே தள்ளிட்டேன். தப்பு தான்… இருந்தாலும், என் வாயை கட்டுப்படுத்த முடியலையே!

Thanks to Dinamalar : http://www.dinamalar.com/news_detail.asp?id=1460673