tanjore idly

Soft yummy idly shop – Tanjore

Place : Sekar idly shop, South street, Tanjore
Phone : 96298 90510
Time : 7:30pm to 11:30pm

Special for soft yummy idly

இடம்: சேகர் கடை இட்லி, தெற்கு வீதி, தஞ்சாவூர்.

போன்: 96298 90510

நேரம்: இரவு 7:30 – 11:30 மணி

‘வீட்டு சாப்பாடு மாதிரியே ருசி இருக்கணும்; இட்லி, சாம்பாரா இருந்தா நல்லாயிருக்கும்’ லேசாக வாயைத் துடைத்தபடியே நான் சொல்ல, எங்களை வித்தியாசமாக பார்த்தார் பாட்டி. ‘கடை எப்படி இருந்தாலும் சாப்பிடுவீங்களா?’ பாட்டி கேட்டு முடிப்பதற்குள், ‘நல்லா ருசியா இருக்கும்னா, தரையில கூட உட்கார்ந்து சாப்பிடுவோம்’ என்றாள் என்னவள். ‘அப்படீன்னா நேரா இப்படி கொஞ்ச தூரம் போயி, தெற்கு வீதியில, ‘சேகர் கடை’ன்னு கேளுங்க. 30 வருஷமா இட்லி வியாபாரம் பண்றாங்க. ருசியும், தரமும் ரொம்ப பிரமாதமா இருக்கும்’ என்றார் பாட்டி!

ருசியின் ரகசியம்: ‘இட்லியோட ருசிக்காகவும், மென்மைக்காகவும் எதையும் சேர்க்கிறதில்லை. சோடா உப்பு கூட போட மாட்டோம். இதெல்லாத்தையும் விட, வீட்டு பெண்களோட கைப்பக்குவம் இந்த ருசிக்கு முக்கிய காரணம்’ என்கிறார்
கடையின் உரிமையாளர் சேகர்.

என்ன விலை: தும்பை பூ போன்ற நிறமும், மென்மையும் கொண்ட, 4 இட்லிகள் 20 ரூபாய்

சோத்து மூட்டை: ‘ஆத்தாடி… இது என்ன கடை மாதிரியே இல்லை’ கடையை பார்த்ததும், என் மாமன் மக இப்படித் தான் பதறிட்டா! ஆமாங்க… சேகர் கடையில பார்சல் தான் அதிகம் போகுது. ‘சரி மாமா… கையேந்தி பவன்னா சாப்பிடக் கூடாதா என்ன; ஆளுக்கு நாலு இட்லி சொல்லு’ பசியில படபடன்னு சொன்னா என் மாமன் மக. தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா, கமகமக்குற பாசிபருப்பு சாம்பாரோட இட்லி வந்துச்சு. ‘சாம்பார்ல கடலை மாவு கலக்கலை’ இட்லியை சாம்பாருல பிரட்டிக்கிட்டே, என் மாமன் மக சொன்னா! ‘ஆமா… ஆமா… இந்த குருமாவுல கூட பட்டை, லவங்கம் அதிகமா இல்லை’ குருமாவுல கிடந்த கொண்டைக்கடலையோட தோலை உறிச்சுக்கிட்டே நான் சொன்னேன். ‘சரி… சரி…பேசாம சாப்பிடு’ன்னு அவ அதட்ட, அந்த அன்புக்கும், இட்லிக்கும் இஷ்டத்தோட கட்டுப்பட்டுட்டேன்!

Thanks to Dinamalar : http://www.dinamalar.com/news_detail.asp?id=1509873