IMG_20160317_171742

Soya varuval – Market road, Ooty

ஊட்டி குன்னூர் போன்ற மலைப்பகுதிகளில் சோயா பெரும்பாலும் மாலை நேர உணவாக தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கிறது.சோயா சில்லி,சோயா வறுவல் என விதவிதமாக சாப்பிடுகின்றனர்.குன்னூரில் ரயில்வே கேட் அருகில் ஒருவர் சூடாய் சில்லி சோயா தள்ளுவண்டியில் போட்டுக்கொண்டிருப்பார்..சில்லி சிக்கன் தோற்று போய்விடும்.அவ்வளவு டேஸ்டாக இருக்கும்.ஊட்டி பகுதியில் நிறைய இடங்களில் சோயா உணவுகள் கிடைத்தாலும் ஊட்டி நகர மக்களின் தேர்வு மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையை சொல்கின்றனர்.

சூடாய் ஆவி பறக்க சோயா வறுவலை ஒரு பிளேட்டில் வைத்து சூடு தாங்கிக்கொள்ள ஒரு பேப்பரையும் தர, தட்டினை டேபிளில் வைத்து ஸ்பூனால் சோயாவை இரண்டாக பிய்க்க ஆரம்பிக்க, சூட்டோடு சோயாவின் வாசனை நம் நாசியினை அடைந்து உடனே வளர்சிதை மாற்றம் போல, நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.சோயாவை பிய்த்து, சுடச்சுட வாயில் போட்டு மெல்ல, ஆஹா…என்ன சுவை…நாக்கில் உள்ள அத்துணை சுவை நரம்புகளும் எழுந்து நின்று வரவேற்கிறது.காரம், உப்பு, கொஞ்சம் மசாலா என கலந்துகட்டி சுவையை அதிகப்படுத்தியது. சிக்கனுக்கு உண்டான சுவை சோயாவிலும் இருக்கிறது. செம டேஸ்ட்.

அப்படியே ஒவ்வொன்றாய் பிய்த்து பிய்த்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, பக்கத்துகாரர் சூப் ஊத்துங்க என்று சொல்லவும், அவரது பிளேட்டுக்கு சூப்பினை சூடாய் சோயாவில் ஊற்றினார் கடைக்காரர்.நானும் என்ன அது என்று கேட்க, காளான் சூப் என சொல்ல, எனக்கும் போடுங்க என்றவுடன் சூடாய் எனது பிளேட்டுக்கும் ஊற்றினார்.வெளியே இருக்கின்ற குளிரில் சோயா ஆறிக்கொண்டிருக்க, சூடாய் சூப் ஊற்றவும் மீண்டும் ஆவி பறக்க ஆரம்பித்தது சோயாவில்.நமக்கும் சூடாய் இருக்க, மீண்டும் சோயா விள்ளல் உள்ளே சென்றது.காளான் சூப்புடன் சோயா வறுவலின் மசாலா ஒன்று சேர அது இன்னொரு சுவையைத் தந்தது.சோயா முழுக்க சாப்பிட்டவுடன் ஒரு வித திருப்தி ஏற்பட, கடைக்காரரிடம் ரொம்ப சுவையாக இருக்கிறது

Veg + non veg restaurant

//http://www.kovaineram.in/2016/03/blog-post.html
//Recommended by Kovaineram Jeeva

Address : Lakshmi mess, market road, Old agraharam road corner, Ooty

IMG_20160317_172646

IMG_20160317_171912

IMG_20160317_171742