3

Sri Gowri mess – Gandhipuram, Coimbatore

கட்லா மீனும், சிக்கன் கிரேவியும் ஆர்டர் செய்தோம்.இலையில் பொரியல், கூட்டு, ஊறுகாய் என முதல் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாக, சுடச்சுட சாப்பாட்டை ஒருவர் கொட்டியபடி…(அள்ளி வைப்பதெல்லாம் வேற ஸ்டைல் போல…)போக, இன்னொருவர், மீன் குழம்பா, சிக்கன் குழம்பா என கேட்டபடியே வர, மீன் குழம்பினை கேட்க, கொஞ்சம் தாராளமாகவே ஊற்றினார்.சுடச்சுடச் சாதத்துடன் மீன்குழம்பினை பிசைந்து சாப்பிட ஆஹா..மீன் குழம்பு அபாரம்.கொஞ்சம் புளிப்பும், காரமும், மீனின் வாசனையும் சேர்ந்து தூக்க, சாப்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் ..இல்லை இல்லை அதிக அதிகமாய் உள்ளிறங்கியது.

சிக்கன் கிரேவிக்கு அடுத்ததாய் சிக்கன் குழம்பினை சாதத்தின் மேல் ஊற்ற, மிக திக்காய் இருக்கிறது குழம்பு.மசாலா, தேங்காய் சேர்த்து அரைத்து வைத்த குழம்புதான்.மிக சுவையாக இருக்கிறது.காரம் உப்பு, மசாலா என எல்லாம் அளவுடனே இருக்க, சாப்பாடும் வஞ்சகம் இன்றி உள்ளே இறங்குகிறது. வயிறு நிறைவது கூட தெரியாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் போதும்னு நினைக்கிறேன் என நண்பரிடம் சொல்லியபோது, அவரிடமிருந்து ஒரு பெரிய ஏப்பமே பதிலாய் வந்தது.மோரும் ரசமும் இன்னும் பாக்கி இருப்பது தெரிய இன்னும் கொஞ்சம் அளவாய் சாப்பிடலாம் என்று ரசத்துக்கு கொஞ்சம் வாங்கி சாப்பிட, ரசம் அருமையோ அருமை.தக்காளி, புளி காம்பினேசனில் ரசம் இன்னும் சாப்பிட தூண்ட, இதற்கு மேல் முடியாது என்று எண்ணி இலையை மூடிவைத்துவிட்டு மெதுவாய் நகர்ந்தபடி வெளியேறினோம்.நல்லா காரஞ்சாரமா சாப்பிடனும்னா கண்டிப்பா போகலாம்.
சாப்பாடு ரூ 70.மிக திருப்தியான சாப்பாடு சாப்பிடனும்னா கண்டிப்பா போகலாம்.சைட் டிஷ் வாங்கியே ஆகணும்கிறது இல்ல.
காந்திபுரம் பஸ்ஸ்டாண்டு செந்தில் குமரன் தியேட்டர் பின்புறம் இருக்கிறது இந்த மெஸ்.

Address : Sri Gowri mess, ram nagar, Near Gandhipuram bus stand, Next to Senthil Kumaran theater backside, Coimbatore

//http://www.kovaineram.in/2016/04/blog-post.html
// Recommended by Kovaineram Jeeva

3

2

1