Salem

Tasty Boli Kadai – Ammapet, Salem

Salem

Oppat Kadai, Soundamman kovil street, Ammapet, Salem
Phone : 96005 44547
Time : 10am to 7pm

Special for Boli, a mouth watering dish

இடம்: ‘ஓப்பட்’ கடை, சவுண்டம்மன் கோவில் தெரு, அம்மாபேட்டை, சேலம்.

போன்: 96005 44547

நேரம்: காலை 10.00 – மாலை 7.00 மணி

‘தமிழகத்து போளி தான், கர்நாடகத்தில் ஒப்பட். அம்மாபேட்டையின் முக்கிய அடையாளமாக ஒப்பட் கடைகள் விளங்குகின்றன’ வாசித்து முடித்து, நான் குட்டித்துாக்கம் ஒன்று போட, சேலம் பேருந்து நிலையம் வந்தடைந்திருந்தது பேருந்து.
‘ஆட்டோக்காரண்ணே… அம்மாபேட்டைக்குப் போகணும்; வர்றீங்களா?’

‘ஆஹா… ஓஹோ…’ ஒப்பட்: மிருதுவா பிசைஞ்சு வைச்சிருக்கிற மைதா மாவுல, தேங்காய் துருவல், வெல்லம், பொட்டுக்கடலை, ஏலக்காய், அரைச்சு வைச்சிருக்கிற பூரணம் சேர்த்து, நல்லா தட்டையாக்கிக்கணும். இதை, தோசை கல்லுல கொஞ்சமா எண்ணெய் விட்டு, ரெண்டு பக்கமும் நல்லா வேக வைச்சு எடுத்தா, அது தான் ஒப்பட்.

ருசியின் ரகசியம்: ‘கை உரலில் தயாராகும் வெல்லம். பொட்டுக்கடலை கலவையும், பூ மாதிரியான தேங்காய் துருவல்களும், விறகு அடுப்பு சமையலும் தான், ருசிக்கு காரணம்’ என்கிறார், ‘ஒப்பட்’ தயாரிக்கும் 66 வயது குணவதியம்மாள்.

விலை என்ன?: தேங்காய் சேர்த்திருப்பதால் அரை நாள் மட்டுமே தாக்குப் பிடிக்கும் ஒப்பட்டின் விலை, 5 ரூபாய்/ ஒன்று.

சோத்து மூட்டை: ‘பசங்களை பார்க்க வந்துட்டு, நான் இப்படி வயித்தை நிறைச்சிட்டு இருக்கிறது தப்பு தான்; ஆனா, இந்த பாழாய்ப் போன நாக்குக்கு, இது தெரிய மாட்டேங்குதே! சும்மா சொல்லக்கூடாது, நானும் எவ்வளவோ போளி சாப்பிட்டிருக்கேன்; ஆனா, இந்த சவுண்டம்மன் கோவில் தெரு ஒப்பட்டு மாதிரி எதுவும் வரலை. சூடான மைதா, அதுக்குள்ளே இருக்கிற தேங்காய் துருவல், வெல்லம் எல்லாத்தையும் சேர்த்து, இதமா, பதமா வாய்க்குள்ளே தள்ளினேன் பாருங்க… வாவ்! யக்கா… ஒரு 10 ஒப்பட் பார்சல் பண்ணிடுங்க!

Thanks to Dinamalar : http://www.dinamalar.com/news_detail.asp?id=1460653