Place : Nature mushroom restaurant, 80 feet road, Anna nagar, Madurai
Phone : 97500 14251
Time : 5:30pm to 10:30pm
Special for all types of yummy food made out of mushroom. Many varieties are available including cutlet, gola, etc.
நேரம்: நேச்சர் காளான் கார்னர், 80 அடி சாலை, அண்ணாநகர், மதுரை.
போன்: 97500 14251
நேரம்: மாலை 5:30 – இரவு 10:30 மணி
‘நேச்சர் காளான் கார்னர்’ வந்தடைந்தன என் கால்கள்.
கடையின் உணவுப் பட்டியலில், ‘காளான் கட்லெட், காளான் கோலா’ என, பெயர்கள் வித்தியாசமாக தெரிய, அவைகளை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தேன். அந்த இடைவெளியில், கல்லாவில் இருந்த ராமனிடம் பேச்சு கொடுத்தேன்.
‘சிவகங்கையில, சின்னதா ஒரு ‘காளான் சூப்’ கடையில ஆரம்பிச்சது இந்த பயணம். ‘மக்களுக்கு சத்தான உணவு கொடுக்கிறோம்; அதையே வித்தியாசமா கொடுத்தா என்ன’ன்னு யோசிக்கும் போது உதிச்சது தான், இந்த பட்டியல்ல நீங்க பார்க்கிற உணவு வகைகள்! சாப்பாட்டு காளான்ல மொத்தம் மூணு வகை இருக்கு! நாங்க, ‘பட்டன் காளான்’ங்கிற ஒருவகை காளானைப் பயன்படுத்துறோம். அசைவ கறி மாதிரியே, காளான்ல நாங்க செய்ற இந்த பதார்த்தங்களுக்கு சைவ பிரியர்கள் மத்தியில செம வரவேற்பு!’ தன் கடை வரலாற்றை ராமன் சுவைபட சொல்லி முடிக்க, சூடான கோலாவும், கட்லெட்டும் என் முன் பரிமாறப்பட்டன.
என்ன விலை?: காளான் கட்லெட் ரூ.10/இரண்டு; காளான் கோலா ரூ.10/இரண்டு
சோத்து மூட்டை: முதல்ல கட்லெட்டை சாப்பிடலாம்னு நினைச்சு, அதுல ஒண்ணை எடுத்து கடிச்சேன். காளான் கூட, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு எல்லாம் சேர்ந்து தந்த ருசியை நாக்கு மெல்லமா உணர்ந்ததும், வேகமா நாலு தட்டு கட்லெட் வயித்துக்குள்ளே போயிருச்சு. அடுத்து கோலாவை எடுத்தா, அதோட ருசி இன்னும் அலாதி போங்க! என்ன தான் அரைச்சு சமைச்சாலும், அசைவ கோலாவுல ஒரு கடினத் தன்மை இருக்கும். ஆனா, காளான் கோலாவை கடிக்கும் போது, அப்படி ஒரு மென்மை! ரெண்டையும் நல்லபடியா முடிச்சதும், அடுத்தது என்னன்னு மனசும் வயிறும் கேட்க, கண்ணு தேட, வசமா சிக்குச்சு காளான் உப்பு கறி! அதைப் பத்தி பெருசா சொல்ல எதுவும் இல்லை; ஆனா, ருசியிலே குறையில்லை! அப்புறம் என்ன… காளான் நிரம்பியிருந்த பானை வயிறை தடவிக்கிட்டே, நண்பரைப் பார்க்க நடையை கட்டிட்டேன்!
Thanks to Dinamalar : http://www.dinamalar.com/news_detail.asp?id=1519474